Visitors

8 March 2010

அணிமா மணிமா எனக்கூறும்
...அட்ட சித்திகள் பெற்றாலும்;
பணிமா தர்களும் பொற்குவையும்
...பேரும் புகழும் பெற்றுமொளிர்
மணிமா லைப்பல புனைந்தாலும்
...மரணம் கொள்ளும் உடற்பிறப்பைத்
துணிமா சக்தி உந்நாமம்
...துதிப்போர்க் கேயாம் ராமக்ருஷ்ணா!....69.

கண்டம் புண்ணா கியதாலோ
...கழலும் வேத விழுப்பொருளைக்
கண்டம் டாமென முழங்கலென
...கருச்சனை செய்யோர் சிங்கமென
கண்டம் ஏழும் கேட்கவிவே
...கானந்தன் வாயாய் நீபகர்ந்தாய்?
கண்டம் மாமுனி யைக்கொணர
...குழந்தை யாகினை ராமகிருஷ்ணா!....70


கண்டம்=தொண்டை
கண்டம்=மணி
கண்டம்=தேசங்கள்
கண்டு+அம்

1 comment:

  1. அன்று உன்பாடல்களைப் படித்தறியாமல்
    விட்டுவிட்டேன்!இன்னிக்கு என்கையாற எழுதிக்
    கண்னீர் சிந்தி மகிழ்கிறேனடா என்கண்ணா!
    இதுவும் எனக்குக் கிடைத்த பாக்கியமாக
    ஏற்றுக் கொள்கிறேன்!
    ஆழ்ந்த பக்தியில் உதித்தப் பாடல்கள்!
    படிக்க இனிக்கின்றன!

    அன்பு சகோதரி,
    தங்கமணி.

    ReplyDelete